'பிரேசில் மாடல் அழகி' உட்பட 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ஆதாரத்துடன் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு! 2.5 million fake voters including 'Brazilian model': Rahul Gandhi makes sensational allegations with evidence!

'THE H FILES' ஆவணங்களை வெளியிட்ட ராகுல்; முதல்வர் சைனியின் சிரிப்புக்குப் பின்னால் சதி எனத் தாக்கு; தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு!

அரியானா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 25 லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்து வெற்றி பெற்றதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று 'THE H FILES' என்ற பெயரில் ஆதாரங்களை வெளியிட்டுப் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஹரியானாவில் நடந்தது ஜனநாயகக் கொலை என்று சாடினார்.

முதலமைச்சரின் சிரிப்புக்குப் பின்னால் சதி ராகுல் காந்தி குற்றச்சாட்டு: 

ஹரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக, அப்போதைய முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி, பாஜக கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும், அதற்கான வேலைகளைச் செய்துவிட்டோம்" எனச் சிரித்தபடியே கூறியதைச் சுட்டிக் காட்டினார். அந்தச் சிரிப்பின் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது. இது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றியது. உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காக நான் பேசுகிறேன். 

போலி வாக்காளர்கள் குறித்த ஆதாரம்ராகுல் காந்தி வெளியிட்ட ஆதாரங்களில் சில அதிர்ச்சி தகவல்கள்:

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் ஒரு தொகுதியில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 22 வாக்குகளைச் செலுத்தி இருக்கிறார். இந்தப்பெண் ஷிமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, விமலா என வெவ்வேறு பெயர்களில் வாக்களித்துள்ளார்.

மற்றொரு பெண்மணி ஒருவர், இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார். இந்தப் பெண் நினைத்தால் ஒவ்வொரு வாக்குப் பதிவு மையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களித்திருக்கலாம். இதுபோல ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி மையங்களில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. 

ஒரே நபர்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு வயதில், வெவ்வேறு அடையாள அட்டைகள் மற்றும் வெவ்வேறு முகவரிகளில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக வெளியிடுவதாக அவர் தெரிவித்தார்.தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுநியாயமான தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

இவ்வளவு போலி வாக்காளர்கள் இருந்தும், வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி காட்சிகளை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் அளித்துள்ளது.  போலி வாக்காளர்களை நீக்குவதற்குத் தேர்தல் ஆணையம் தனிச் செயலி வைத்துள்ளது. அவர்களை நீக்கினால், நியாயமான தேர்தல் நடைபெறும் என்பதால் தேர்தல் ஆணையம் அதனைச் செய்யவில்லை.

இந்தியாவின் Gen Z மற்றும் இளைஞர்கள் வாக்குத் திருட்டைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியது. உங்கள் எதிர்காலம் அழிக்கப்படுகிறது. உண்மை மற்றும் அகிம்சையின் வழியில் நமது ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் இந்திய இளைஞர்களிடம் உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள், தேசிய மற்றும் அரியானா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk