சட்டவிரோத பணப் பரிமாற்றம் புகார்: இரு முன்னாள் வீரர்களின் ₹11.14 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் சுமார் ₹11.14 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை (ED - Enforcement Directorate) முடக்கியுள்ளது.
இருவரும் சில ஆன்லைன் பெட்டிங் (சூதாட்டம்) செயலிகளை விளம்பரப்படுத்தியதில் ஈடுபட்டதன் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் (Money Laundering) நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் (PMLA - Prevention of Money Laundering Act) கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ₹11.14 கோடி ஆகும்.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் பிரபலங்கள் ஈடுபடுவது குறித்து ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது அமலாக்கத்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
