10-ம் வகுப்பு மார்ச் 11-ல் தொடக்கம்; 12-ம் வகுப்பு மார்ச் 2-ல் ஆரம்பம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் உடனடியாகப் புதிய அட்டவணைக்கு ஏற்பத் தங்களைத் தயார் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை (2026):
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 11, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 6, 2026 வரை நடைபெற உள்ளன.
தேர்வு தொடக்கம்: மார்ச் 11, 2026
தேர்வு முடிவு: ஏப்ரல் 6, 2026
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை (2026):
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 2, 2026 அன்று தொடங்கி மார்ச் 26, 2026 வரை நடைபெற உள்ளன.
தேர்வு தொடக்கம்: மார்ச் 2, 2026
தேர்வு முடிவு: மார்ச் 26, 2026
அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றித் தேர்வுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முழுமையான கால அட்டவணையைப் பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
