தலைவருக்கே ஒழுக்கம் இல்லாதபோது தொண்டர்களுக்கு எப்படி இருக்கும்?' – விஜய்யை வெளுத்து வாங்கிய எஸ்.வி.சேகர்! 'Vijay Lacks Discipline': Actor S.V. Sekar Launches Fierce Attack on TVK Chief over Karur Deaths.

தலைவருக்கே ஒழுக்கம் இல்லாதபோது தொண்டர்களுக்கு எப்படி இருக்கும்?' – விஜய்யை வெளுத்து வாங்கிய எஸ்.வி.சேகர்! 'Vijay Lacks Discipline': Actor S.V. Sekar Launches Fierce Attack on TVK Chief over Karur Deaths.

வெடிகுண்டு மிரட்டல் புகாரளிக்க வந்த நடிகர்: "அமித்ஷாவிடம் ஒப்பந்தம் போட்டது போல், விஜய் ரஜினிகாந்த் போல் பின்வாங்குவார்" என அடுக்குமொழித் தாக்குதல்.


சென்னை, அக்டோபர் 3, 2025:தனது வீட்டிற்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இமெயில்கள் வருவதாகப் புகார் அளிக்கச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் எஸ்.வி.சேகர், வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தபோது கரூர் உயிரிழப்புச் சம்பவம் குறித்துப் பேசியது அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய்க்குப் பொதுவெளியில் நேரடியாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

வீட்டிற்குப் பாதுகாப்பு கேட்டு புகார்:

எஸ்.வி. சேகர் அளித்த புகாரில், கடந்த சில நாட்களாக வி.வி.ஐ.பி.க்களின் பெயர்களில் 20க்கும் மேற்பட்ட முறை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாகவும், இதனால் தனது குடும்பத்தினர் பயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனக் காவல்துறையிடம் அழுத்தம் கொடுத்துள்ளார். மேலும், இந்த மிரட்டல் இமெயில்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் அனுப்புவதாகவும், 1990களில் இருந்தே தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் தெரிவித்தார்.

விஜய் மீதான கடுமையான குற்றச்சாட்டுகள்:

பொறுப்புக் குறைபாடு: "தனக்கு வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த விஜய் தவறி விட்டார். இது அவரது தவறு" என்று ஸ்ட்ரைட்டாகச் சொன்னார். கரூர் சம்பவத்தில் விஜய்யே பொறுப்பு என்றும், போலீசுக்கு அளித்த தகவலிலும் காலதாமதம் செய்தது தவறு என்றும் குற்றம் சாட்டினார்.

ஒழுக்கமற்ற கூட்டம்: "ஒழுக்கம் தலைவருக்கே இல்லாத போது தொண்டர்களுக்கு எப்படி இருக்கும்? இது ஒரு ஒழுக்கமற்ற கூட்டம்" என்று கடுமையாக விமர்சித்தார். "சினிமா நடிகர் பின்னாடி போகாதீங்க. ரசிகர் மன்றம் தேவையில்லை. விஜய் எம்.ஜி.ஆராக முடியாது. அவருக்கு அரசியல் பக்குவம் இல்லை" என்றும் திட்டவட்டமாகப் பேசினார்.

ஆசையும் செயல்பாடும்: "விஜய் நல்ல தலைவனாக ஆசைப்பட்டு இருந்தால், கரூர் சென்று இறந்தவர்களின் வீட்டிற்குச் சென்றிருக்க வேண்டும். ஹெலிகாப்டரில் இனிமேல் விஜய் பறந்து வந்து பஸ் மேலே இறங்கி விடலாம்" என்று நக்கலடித்தார். "தண்ணீர் கூட ஏன் கொடுக்கவில்லை?" என்றும் கேள்வி எழுப்பினார்.

தந்தை vs புஸ்ஸி ஆனந்த்: "விஜய் எனக்கு எதிரி அல்ல. அவர் தந்தை சந்திரசேகரின் பேச்சைக் கேட்காமல், புஸ்ஸி ஆனந்த் பேச்சைக் கேட்டதாலேயே இந்த பிரச்சினையில் விஜய் சிக்கி உள்ளார்" என்று கட்சி விவகாரத்தில் மூக்கை நுழைத்தார்.

அரசியல் பக்குவம்: "27 ஆயிரம் பேர் இருக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத விஜய் 10 கோடி பேர் இருக்கும் தமிழகத்தை கட்டுப்படுத்த முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

ரஜினிகாந்துடன் ஒப்பீடு:

நடிகர் ரஜினிகாந்தை இழுத்து வந்த எஸ்.வி.சேகர், "ரஜினிகாந்திற்குப் பால் அபிஷேகம் செய்தாலும் தவறுதான். அவர் என்ன கடவுளா? என் விட அதிக சம்பளம் வாங்குகிறார் அவ்வளவுதான். நடிகர் ரஜினிகாந்த் முன்கூட்டியே இது போன்ற பிரச்சினைகள் எல்லாம் வரும் என்று தெரிந்து கொண்டு விலகி விட்டார்" என்று சுடுசொற்களைப் பயன்படுத்தினார். ரஜினிகாந்த் போலவே விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்றும் ஜோசியம் கூறினார். மேலும், "விஜய் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாகச் சொல்வது அவருக்கான சாபம் அது" என்றும் கூறினார்.

பா.ஜ.க. மற்றும் தி.மு.க. மீதான கருத்துக்கள்:

பா.ஜ.க.: தான் பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்து விட்டதாகவும், பா.ஜ.க.வில் ஸ்லீப்பர் செல்லாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். "பா.ஜ.க. என்பது ஒரு பெரிய பாறாங்கல். அதனைக் கட்டிக்கொண்டு குதிப்பவர்கள் தண்ணீரில் மூழ்கி விடுவார்கள்" என்று பா.ஜ.க.வை விமர்சித்தவர், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க.வையும் சேர்த்துத்தான் அப்படிச் சொல்கிறேன் என்றும் க்ளாரிஃபிகேஷன் கொடுத்தார். பா.ஜ.க. தமிழ்நாட்டில் வராது என்றும், பா.ஜ.க. கரூர் உயிரிழப்பை வைத்து அரசியல் செய்கிறது என்றும் கூறினார். அண்ணாமலைக்கு ஏன் பாதுகாப்பு என்று கேள்வி எழுப்பினார்.

தி.மு.க.: "தி.மு.க.வில் சேருவது யாருக்காவது பிடிக்கவில்லை என்றால், நான் கண்டிப்பாக தி.மு.க.வில் சேருவேன்" என்று தசையை முறுக்கிய எஸ்.வி.சேகர், நட்பின் அடிப்படையில் முதல்வர் தனது நாடகத்தைப் பார்க்க வந்தார் என்றும், கலைஞர் குடும்பத்துடன் 40 ஆண்டுகளாக நட்பு உண்டு என்றும் கூறினார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks