ஒரு இன்ஸ்பெக்டர் நினைச்சா எவ்வளவோ சம்பாதிக்கலாம்; நான் 5 பைசா கூட வாங்கியதில்லை – தஞ்சை ஆய்வாளரின் பரபர பேச்சு! I Haven't Taken Even 5 Paise': Thanjavur Traffic RI's Bold Speech on Honesty to Auto Drivers

ஒரு இன்ஸ்பெக்டர் நினைச்சா எவ்வளவோ சம்பாதிக்கலாம்; நான் 5 பைசா கூட வாங்கியதில்லை – தஞ்சை ஆய்வாளரின் பரபர பேச்சு! I Haven't Taken Even 5 Paise': Thanjavur Traffic RI's Bold Speech on Honesty to Auto Drivers

மது அருந்த மாட்டோம் என குலதெய்வம் மீது ஆணை எடுத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்; நேர்மை குறித்துப் பேசிய போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன்.

தஞ்சை, அக்டோபர் 3, 2025:தஞ்சை போக்குவரத்து காவல் துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திலகர் திடல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டக் கூடாது என வலியுறுத்திய தஞ்சை மாநகரப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் பேசிய கருத்துக்கள் அரசு வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய ஆய்வாளர் ரவிச்சந்திரன், ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் சில அறிவுரைகளை (Advice) வழங்கினார். "உங்களுக்கு உங்களைப் பிடிக்க வேண்டும்; அப்போதுதான் உங்களை அடுத்தவர்களுக்குப் பிடிக்கும். தூங்கி வழிஞ்சு, முகம் கழுவாம, நைட் அடிச்ச போதைத் தெளியாம இல்லாம எல்லாரும் ஃப்ஃப்ரெஷ்ஷா இருங்கள்" என்று ஸ்ட்ராங்காகப் பதிவு செய்தார். மேலும், "உங்க ஓனருக்கு உண்மையா இருங்கள்; அப்போது உங்க ஓனருக்கு உங்கள் மேல் ஆசை வரும். எங்கள் வேலையிலும் அப்படித்தான். நாம் ஒருத்தருக்கு உண்மையா இருந்தால் கடவுள் நமக்குத் துணையாக இருப்பார்" என்று ஃபீல்டில் உள்ள சவால்கள் குறித்துப் பேசினார்.

அப்போது அவர், "நான் நினைச்சா எவ்வளவோ சம்பாதிக்கலாம். ஒரு டிராபிக் இன்ஸ்பெக்டர் நினைச்சா எவ்வளவோ சம்பாதிக்கலாம். நான் ஐந்து பைசா கூட சம்பாதிக்கல" என்று திறந்த மனதுடன் பேசினார். நேர்மையாக இருங்கள் என்றும், "நியாயமா இருந்து என்ன உதவி வேணும்னாலும் கேளுங்கள், செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உறுதி அளித்தார்.

இதையடுத்து, போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் வாசிக்க, அவரைப் பின்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பணியில் இருக்கும்பொழுது சத்தியமாக எங்களது குலதெய்வத்தின் மீது ஆணையாக, தண்ணீர் அடித்து விட்டு வண்டி ஓட்ட மாட்டோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் குலதெய்வம் மேல் ஆணை என்று ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் ஒரே குரலில் உறுதிமொழி (Pledge) எடுத்துக் கொண்டனர். காவல் ஆய்வாளரின் இந்தக் கிரவுண்ட் லெவல் அணுகுமுறைக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks