கரூர் மரணம்: 'முதலில் விஜய் பொறுப்பேற்க வேண்டும்' - சிவகாசியில் நாம் தமிழர் சீமான் அதிரடிப் பேச்சு! Seeman Attacks Vijay Over Karur Deaths: Vijay Must Take Responsibility First

கரூர் மரணம்: 'முதலில் விஜய் பொறுப்பேற்க வேண்டும்' - சிவகாசியில் நாம் தமிழர் சீமான் அதிரடிப் பேச்சு!  Seeman Attacks Vijay Over Karur Deaths: Vijay Must Take Responsibility First

"சினிமா ஒப்பந்தம் போல் அரசியல் ஒப்பந்தம்"; பட்டாசுத் தொழில் முதல் மணிப்பூர் வரை சரமாரி கேள்விகளை எழுப்பிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்.


விருதுநகர் மாவட்டம், அக்டோபர் 3, 2025: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கரூர் சம்பவம், பட்டாசுத் தொழில் நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பல்வேறு கேள்விகளை முன்வைத்து அனல் பறக்கும் பேட்டி அளித்தார்.

கரூர் சம்பவம் மற்றும் விஜய்க்கு ஆதரவான அரசியல்:

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்துப் பேசிய சீமான், அந்தச் சம்பவத்திற்கு விஜய் முதலில் பொறுப்பேற்க வேண்டும் என்று ஸ்ட்ராங்காகப் பதிவு செய்தார். எல்லாவற்றுக்கும் அரசுதான் பொறுப்பு என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

மணிப்பூர் vs கரூர்: கரூர் சம்பவத்திற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுபவர்கள், மணிப்பூர் கலவரத்திற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவதில்லை என பழைய 'கேஸை' கையில் எடுத்தார்.

பா.ஜ.க.வின் நிலைப்பாடு: பா.ஜ.க. விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார். பா.ஜ.க.வின் எம்.பி.க்கள் குழு, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கொடுப்பதைவிட, அரசை குறை கூறுவதில்தான் மும்முரமாக உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: இதே நீதிபதி ஆணையத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்துத் தான் 3 மணி நேரம் சாட்சியம் அளித்ததாகவும், ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்பள உயர்வுடன் பணியிட மாறுதல் மட்டுமே நடந்துள்ளது என்றும் அவர் வேதனை தெரிவித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உண்மை கண்டறியும் குழு அமைக்காத பா.ஜ.க., இப்போது அமைப்பது வெறும் அரசியல் நாடகம் என்றார்.

நிகழ்வுகளின் முரண்பாடு: கள்ளச்சாராய மரணத்துக்குக் காரணமான முதல்வர் செல்லவில்லை, ஆனால் விஜய் சென்றார். தற்போது கரூர் உயிர் பலிக்குக் காரணமான விஜய் செல்லவில்லை, ஆனால் முதல்வர் சென்றார் என்று இருவேறு நிகழ்வுகளின் முரண்பாட்டைச் சுட்டிக்காட்டினார்.

பட்டாசுத் தொழில் மற்றும் சுற்றுச்சூழல்:

சிவகாசிப் பட்டாசுத் தொழில் நெருக்கடி குறித்துப் பேசிய அவர், பட்டாசால் ஏற்படும் காற்று மாசுவை விட, நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றில் இருந்துதான் அதிக மாசு ஏற்படுகிறது என்றார். பெரிய முதலாளிகளை விட்டுவிட்டு, சிவகாசியில் உள்ள சிறு முதலாளிகளின் பட்டாசுத் தொழிலுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இங்கு வந்து நிலவரத்தைப் பார்த்து விட்டுத்தான் பட்டாசு குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

மாநாடுகள் மற்றும் அரசின் இழப்பீடு:

மக்களின் வாழ்வுக்கு அடிப்படையான பஞ்ச பூதங்கள் குறித்து வருங்காலத் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீர், மரம், மலை, கடல் என மாநாடுகள் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

குடித்து விட்டு இறந்தவர், நடிகரைப் பார்க்க வந்து இறந்தவர் ஆகியோருக்கு இழப்பீடு வழங்கும் தமிழக அரசு, மீனவர், ராணுவ வீரர் இறந்தால் எவ்வளவு லட்சம் கொடுக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

திருவண்ணாமலையில் காவலர்கள் இரு ஆந்திரப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தது, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தலைகுனிவு என்றும் அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

இறுதியாக, தி.வி.கே. (த.வெ.க.) மற்றும் தி.மு.க. (திமுக) ஆகிய இரு கட்சிகளுக்கும் பெயரில் மட்டுமே ஒற்றுமை உள்ளது என்று சீமான் ஃபைனலாகப் பதிவு செய்தார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks