வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! North Chennai Gangster Nagendran in Critical Condition at Stanley Hospital

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! North Chennai Gangster Nagendran in Critical Condition at Stanley Hospital

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1, ஆயுள் தண்டனைக் கைதிக்குக் கல்லீரல் பாதிப்பு; உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிகிச்சை!

சென்னை, அக். 2: வடசென்னையின் பிரபல தாதாவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியுமான (A1) நாகேந்திரன் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரவுடி நாகேந்திரனின் பின்னணி

ஆயுள் தண்டனைக் கைதியான ரவுடி நாகேந்திரன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கல்லீரல் பாதிப்பு இருந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 13-ஆம் தேதி அவர் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போதைய நிலை

சிகிச்சையில் இருந்த நாகேந்திரனை, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மேல் சிகிச்சைக்காகக் குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன்பின்னர், அவர் மீண்டும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலேயே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது உடல்நலம் மிகவும் குன்றிய நிலையில் இருப்பதாகவும், அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks