அடுத்தடுத்து விபரீதம்: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 3 பேர்! – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! CCTV Footage Viral: Railway Police Rescue Three Persons Who Fell From Moving Train in Jolarpettai.

அடுத்தடுத்து விபரீதம்: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 3 பேர்! – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! CCTV Footage Viral: Railway Police Rescue Three Persons Who Fell From Moving Train in Jolarpettai.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஒரே நாளில் இரண்டு சம்பவங்கள்; மின்னல் வேகத்தில் செயல்பட்டு தந்தை, மகள் மற்றும் மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே போலீசார்.


திருப்பத்தூர் மாவட்டம், அக்டோபர் 3, 2025: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று (அக். 2) ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு விபரீதச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஒரு தந்தை, மகள் மற்றும் ஒரு மூதாட்டி ஆகியோரை அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவல்துறையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மீட்டனர். இந்தச் சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்குத் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில், நேற்று வினோத் என்பவர் தனது 14 வயது மகளுடன் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்துள்ளார். அப்போது, நிலைதடுமாறிய தந்தை மற்றும் மகள் இருவரும் கீழே விழ முயன்றனர். இதைப் பார்த்துக் கொண்டிந்த அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் விபேந்திரகுமார், உடனடியாகச் செயல்பட்டு, அவர்கள் ரயிலில் சிக்காதவாறு இழுத்து இருவரின் உயிரையும் அதிசயமாகக் காப்பாற்றினார்.


இந்தச் சம்பவம் முடிந்து சிறிது நேரத்தில், விஜயகுமாரி என்ற மூதாட்டி ஒருவர் திருப்பதி செல்லும் ரயிலில் ஏற முயன்றபோது, நிலைதடுமாறி கீழே விழ முற்பட்டார். அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சஞ்ஜெய், துரிதமாகச் செயல்பட்டு மூதாட்டியை மீட்டு, அவருக்கு ரயில்வே முதலுதவி மையத்தில் சிகிச்சை அளித்தார்.

ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த, ஓடும் ரயிலில் இருந்து தவறி விழ முயன்ற இந்தச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எனினும், ஆபத்தில் சிக்கியவர்களைத் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துரிதமாக மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களான விபேந்திரகுமார் மற்றும் சஞ்ஜெய் ஆகியோரின் வீரச் செயலைப் பொதுமக்கள் மற்றும் பயணிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks