செல்போன் எண்ணை ப்ளாக் செய்ததால் ஆத்திரம்; காதலியைக் கொன்று இளைஞர் தற்கொலை!
காதலியைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த இளைஞர், பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த ரக்ஷிதா (23), அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் பூஜாரி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரக்ஷிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரக்ஷிதா தனது செல்போனில் கார்த்திக்கின் எண்ணை ப்ளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், நேற்று காலை ரக்ஷிதாவைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு அங்கிருந்து தப்பியோடிய கார்த்திக், பின்னர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.