கள்ளக்காதலனுடன் உல்லாசம்: கணவர் மீது திருட்டுப்பழி சுமத்திய மனைவி! Wife Accused Husband of Theft to Live with Lovers

மகளின் காதலனுடனும் தகாத உறவு; விசாரணையில் உண்மை வெளிவர மனைவி கைது!

கணவர் மீது திருட்டுப்பழி சுமத்திய மனைவி, தனது இரண்டு கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருந்த உண்மை விசாரணையில் வெளிவந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கோரேகான் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி ஊர்மிளா (44). இவருக்கு ஓர் இளைஞருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. அதைவிட அதிர்ச்சியாக, தனது மகளின் காதலனுடனும் ஊர்மிளாவுக்குத் தகாத உறவு இருந்துள்ளது.

இந்த நிலையில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, தனது நகைகளை விற்று ரூ.10 லட்சத்தை அந்த இளைஞரிடம் ஊர்மிளா கொடுத்துள்ளார். மேலும், சில நகைகளைத் தனது மகளின் காதலனுக்கும் கொடுத்துள்ளார். அதன் பின்னர், நகைகள் திருடுபோனதாகத் தனது கணவர் ரமேஷ் மீது ஊர்மிளா புகார் அளித்துள்ளார்.

போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது, ஊர்மிளாவின் நடவடிக்கைகள் குறித்துச் சந்தேகம் அடைந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், அவர் கள்ளக்காதலர்களுக்காக நகைகளை விற்று, கணவர் மீது திருட்டுப் பழியைச் சுமத்திய உண்மை வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீசார் ஊர்மிளாவைக் கைது செய்துள்ளனர்.



Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!