எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தி.மு.க.வுக்குத் தாவும் மூத்த தலைவர்; அரசியல் வட்டாரங்களில் சூசகமான தகவல்!
அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியான மருதுஅழகுராஜ், தி.மு.க.வில் இணையப் போவதாக வெளிவந்த தகவல், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக அறியப்பட்ட இவரின் திடீர் முடிவு, அ.தி.மு.க. வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்விக்குப் பிறகு, கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். இந்தச் சூழலில், மருதுஅழலகுராஜ் தி.மு.க.வில் இணையப் போவதாகக் கிடைத்த சூசகமான தகவல், பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இருப்பினும், இந்தச் செய்திகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. நம்பத் தகுந்த வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினாலும், மருதுஅழகுராஜ் தரப்பில் இருந்தோ அல்லது தி.மு.க.வில் இருந்தோ எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், அ.தி.மு.க.வின் அரசியல் எதிர்காலம் குறித்து மேலும் கேள்விகள் எழும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.