ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் அதிரடி; நுகர்வோர்கள் அதிர்ச்சி!
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல், தங்களது தினசரி 1ஜிபி ப்ரீபெய்ட் திட்டங்களை ரத்து செய்துள்ள நிலையில், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லையென இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.
சமீபத்தில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ₹249 மதிப்புள்ள தினசரி 1ஜிபி டேட்டா திட்டத்தை நீக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் அதே மதிப்புள்ள ₹249 தினசரி 1ஜிபி டேட்டா திட்டத்தை நிறுத்தியுள்ளது. மேலும், ₹299 திட்டத்தைக் குறைந்தபட்ச மாதாந்திர பேக்காக ஏர்டெல் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளில் தலையிடப் போவதில்லையென இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மறுப்பு தெரிவித்துள்ளது. இரு நிறுவனங்களும் எந்தத் தவறும் செய்யவில்லை எனவும் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இனி நுகர்வோர்கள் ₹299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.