தலையணை உறைகளை வாரத்திற்கு ஒருமுறை துவைப்பது அவசியம் என அமெரிக்காவின் National Sleep Foundation எச்சரித்துள்ளது.
ஆரோக்கியமான தூக்கத்திற்கும், சருமப் பாதுகாப்பிற்கும் தலையணை உறைகளைத் தொடர்ந்து சுத்தம் செய்வது மிக முக்கியம் என அமெரிக்காவின் National Sleep Foundation எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது தலையணை உறைகளைத் துவைக்க வேண்டும் என அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
பாக்டீரியாக்களின் கூடாரம்
நாம் தூங்கும்போது, தலை மற்றும் முகத்திலிருந்து வரும் வியர்வை, எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்கள் தலையணை உறைகளில் படிந்து, பாக்டீரியாக்கள் வளர ஏற்றச் சூழலை உருவாக்குகின்றன. ஓர் ஆய்வின்படி, ஒரு வாரம் துவைக்காத தலையணையில், ஒரு சதுர அங்குலத்திற்கு 50 லட்சத்திற்கும் அதிகமான பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலையணை உறையைத் துவைக்காமல் விடும்போது, அந்தப் பாக்டீரியாக்கள் சருமம் மற்றும் சுவாசப் பாதையை நேரடியாகப் பாதிக்கின்றன. இதனால், சருமத்தில் அரிப்பு, முகப்பரு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுடன், ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இந்தத் தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறவும் தலையணை உறைகளைத் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.