அவரது முதல் தேர்தலே கடைசி தேர்தலாக இருக்கும்; ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களை வரவேற்ற பா.ஜ.க!
த.வெ.க. தலைவர் விஜயின் அரசியல் முதல் தேர்தலே கடைசி தேர்தலாக இருக்கும். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விடம் ஒரு எம்.பி. சீட்டுக்கு எப்படி கமல்ஹாசன் சென்றாரோ, அதே போன்று தான் விஜய்யும் செல்வாரென பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த வேலூர் இப்ராஹிம், தமிழகத்தில் மாற்று வாக்காளர்கள் என்று ஒரு 10% பேர் உள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய் 6 முதல் 8 சதவீதம் வாக்குகள் பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
இதுதான் அவருடைய முதல் தேர்தல். ஆனால், இதுவே அவரது கடைசி தேர்தலாக இருக்கும். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு எம்.பி. சீட்டுக்காக எப்படி கமல்ஹாசன் தி.மு.க.விடம் சென்றாரோ, அதேபோலத்தான் விஜய்யும் செல்வார எனத் தெரிவித்தார்.