கல்லூரி மாணவர்களை வெட்டிய ரவுடிகள் தப்பி ஓட முயன்றபோது எலும்பு முறிவு - மாவுக்கட்டுடன் சிறையில் அடைப்பு! Rowdies who attacked college students end up with fractures while escaping

அயனாவரம் பகுதியில் நடந்த பயங்கர மோதல்; ஏற்கனவே அடித்து விரட்டியதால் ஏற்பட்ட முன்விரோதம் - போலீசார் விசாரணை!

சென்னை அயனாவரத்தில், வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவர்களை வெட்டிய ரவுடிகளில் இருவர், போலீஸாரிடமிருந்து தப்பி ஓட முயன்றபோது எலும்பு முறிவு ஏற்பட்டு, மாவுக்கட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயனாவரம் வீராசாமி தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அருள்மொழி வர்மன், தனது நண்பர்களான அபினேஷ் மற்றும் அப்துல்லாவுடன் வீட்டில் இருந்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே புகுந்து மூவரையும் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் இருந்த மூவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அயனாவரம் போலீசார் நடத்திய விசாரணையில், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (எ) முட்டை சூர்யா, சிலம்பரசன் (எ) சிலம்பு, அண்ணா நகரைச் சேர்ந்த பல்லு கார்த்திக் மற்றும் ஒருவர் என நான்கு பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் அவர்களைப் பிடிக்கச் சென்றபோது, அந்த மூவரும் தப்பி ஓட முயன்று, இருந்த இடத்திலிருந்து கீழே குதித்துள்ளனர். அப்போது, முட்டை சூர்யாவுக்கு வலது கையும், சிலம்பரசன்னுக்கு வலது காலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், பல்லு கார்த்திக்*உடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இந்த மோதலுக்கான காரணம் குறித்து விசாரிக்கையில், ஒரு வாரத்திற்கு முன்பு முட்டை சூர்யா**, அபினேஷ் என்பவரைத் தங்கள் பகுதிக்கு ஏன் வருகிறாய் என்று கேட்டுத் தாக்கி அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதற்குப் பழிவாங்கும் நோக்கில், அபினேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சூர்யாவைத் தாக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தத் தகவலை முன்கூட்டியே அறிந்த சூர்யா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மாணவர்களை முதலில் தாக்கியுள்ளாரெனப் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!