விஜய் திருவண்ணாமலை சுற்றுப்பயணம்: காவல்துறை அனுமதி கோரி மனு! Vijay to visit Tiruvannamalai, party seeks police permission

விஜய் திருவண்ணாமலை சுற்றுப்பயணம்: காவல்துறை அனுமதி கோரி மனு!  Vijay to visit Tiruvannamalai, party seeks police permission

நவம்பர் 8-ஆம் தேதி அண்ணா சிலை முன்பு உரையாற்ற திட்டம்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நவம்பர் 8-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி அவரது கட்சி நிர்வாகிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அவர் நவம்பர் 8-ஆம் தேதி திருவண்ணாமலைக்கு வர உள்ளார். திருவண்ணாமலையில் அண்ணா சிலை முன்பு உரையாற்றுவதற்கும், அதனைத் தொடர்ந்து செங்கம், கீழ்பெண்ணாத்தூர், வேட்டவலம், ஆரணி, போளூர், கலசப்பாக்கம், செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் தலைமையில், கிழக்கு, வடக்கு, மேற்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று மனு அளித்தனர். பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுவதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி அவர்கள் இந்த மனுவை சமர்ப்பித்ததாகத் தெரிவித்தனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks