அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை: தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சரணடைந்தார்! Man surrenders after murdering AIADMK leader over money dispute

அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை: தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சரணடைந்தார்!  Man surrenders after murdering AIADMK leader over money dispute

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடந்தது அம்பலம்; போலீசார் தீவிர விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, அதிமுக கிளைக் கழக அவைத் தலைவர் கனகராஜ் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளி தஞ்சாவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கொலைக்குப் பிறகு தற்கொலைக்கு முயன்ற அந்த இளைஞர், பின்னர் மனம் மாறிச் சரணடைந்தது, இந்த வழக்கில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே மாத்தூரில் நகைக்கடை நடத்தி வந்த அ.தி.மு.க. நிர்வாகி கனகராஜ் (75), கடந்த 13-ஆம் தேதி இரவு தனது கடையில் மர்ம நபரால் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை நடந்த இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. ராஜாராம் மற்றும் டி.எஸ்.பி. ராஜூ உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அஸ்வின் ராஜ் (23) என்ற இளைஞர், கொலைக்குப் பிறகு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், மனம் மாறிய அவர், நேற்று காலைத் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகக் கனகராஜை கொலை செய்ததாக அஸ்வின் ராஜ் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து நாச்சியார்கோவில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, அஸ்வின் ராஜ்-ஐ கைது செய்து, அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks