த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு; பயத்தால் பழிவாங்கும் திமுக அரசு - விஜய் கடும் கண்டனம்! Vijay Criticizes DMK Government After Case Filed Against TVK Leade

த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு; பயத்தால் பழிவாங்கும் திமுக அரசு - விஜய் கடும் கண்டனம்!  Vijay Criticizes DMK Government After Case Filed Against TVK Leade

போக்குவரத்து இடையூறு எனக் காவல்துறை வழக்கு; வெற்று விளம்பர மாடல் அரசுஎன விஜய் எக்ஸ் பக்கத்தில் ஆவேசம்!


திருச்சி விமான நிலையப் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்தபோது, போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆறு பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் செயலுக்கு, த.வெ.க. தலைவர் விஜய் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் ஆவேசமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், மாவட்டப் பொறுப்பாளர் கரிகாலன் உள்ளிட்டோர் திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோயிலுக்கு வந்தனர். அப்போது, அவர்களின் வாகனங்களைப் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி, காவல்துறையினர் தங்களது பணியைச் செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெற்று விளம்பர மாடல் திமுக அரசு

இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது என்று நேரடியாக ஆளும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது. மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது, என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து, முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என். ஆனந்த் மீதும் நிர்வாகிகள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks