Vanathi Srinivasan Press Meet: திமுக அரசின் துரோகம் - மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் சாடல்! DMK Government Denies Permission for Public Schemes: Vanathi Srinivasan

Vanathi Srinivasan Press Meet: திமுக அரசின் துரோகம் - மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் சாடல்! DMK Government Denies Permission for Public Schemes: Vanathi Srinivasan

கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பாஜக நெருக்கமாக உள்ளது; ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார் என பேட்டி!

பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆளுங்கட்சி அனுமதி மறுப்பதாக திமுக அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

நாங்கள் நடத்தும் மக்கள் நலத்திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை. எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்கள் நடத்தும் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்காமல் இருப்பது மக்களுக்குச் செய்யும் துரோகம்" என்று அவர் கூறினார். மேலும், பொதுத் தளங்களில் பாஜகவின் நலத் திட்டங்கள் வெளிவரக் கூடாது என திமுக அரசு நினைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கோவை மக்களின் பிரச்சனைகள்:

கோவை மக்களுக்கு 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கிடைப்பதாகவும், சிறுவாணி அணையில் நீர்மட்டம் குறைய முக்கிய காரணம், நீர் மட்டத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததுதான் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். "கேரள அரசுடன் தமிழக அரசு பேச தயங்குவது ஏன்?" என்று கேள்வி எழுப்பிய அவர், பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் திமுகவுக்கு இல்லை என்றும் கூறினார்.

கூட்டணி மற்றும் அரசியல் விமர்சனம்:

யாரெல்லாம் திமுகவுக்கு எதிராக இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பது தேசிய ஜனநாயக கூட்டணியின் எண்ணம்" என்று தெரிவித்த வானதி சீனிவாசன், இதுகுறித்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் புதிதாக அரசியலுக்கு வருகிறார் எனவும் குறிப்பிட்டார். அவரது அரசியல் பயணத்தில் ரசிகர்களை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்றும், ரசிகர்கள் கூட்டத்தில் கட்டுப்பாடின்றி இருந்தால் எந்தப் பயனும் இல்லை என்றும் கூறினார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், "பிரதமர் மோடிக்கு எதிராக எந்தப் பிரச்சனையும் எழுப்ப முடியாததால், ராகுல் காந்தி எவ்வித ஆதாரமும் இல்லாமல் வாக்காளர் பட்டியல் தொடர்பாகப் பிரச்சனை எழுப்புகிறார்" என்றார். மேலும், 'பணம் கொடுத்து வாக்கு வாங்குவது குற்றம்' என்பதை அரசியல் கட்சிகளும், மக்களும் சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திமுக அரசின் ஒத்துழையாமை:

மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் சமூக கூடங்களில் மருத்துவ முகாம் நடத்த அனுமதி கோரினால், வேண்டுமென்றே கால தாமதம் செய்வதாகவும், சில நேரங்களில் அனுமதி மறுப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார். இதனால் வேறு வழியின்றி தனியார் மண்டபங்களில் மருத்துவ முகாம்களை நடத்துவதாகவும், தாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்பதை திமுக அரசு மறந்துவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks