செப்.27-ஆம் தேதி வட சென்னையிலும், அக்.25-ஆம் தேதி தென் சென்னையிலும் பரப்புரை செய்ய அனுமதி கோரிக்கை!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னையில் பரப்புரை செய்வதற்கு அனுமதி கோரி, அக்கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னையில் இரண்டு கட்டங்களாகப் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி வட சென்னையிலும், அக்டோபர் 25-ஆம் தேதி தென் சென்னையிலும் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டு, தவெக சார்பில் காவல் துறையினரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம், மாநிலத் தலைநகரில் தனது தலைவர் மூலம் மேற்கொள்ளவிருக்கும் முதல் முக்கிய அரசியல் நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்தப் பரப்புரைக்கான அனுமதி கிடைத்ததும், கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.