மேஷம் முதல் மீனம் வரை... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
சென்னை, செப்டம்பர் 21: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்றைய தினத்திற்கான ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்
கடின உழைப்புக்கு வெற்றி உண்டு. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
ரிஷபம்
இன்று எதிர்பாராத தன வரவு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
மிதுனம்
வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய திட்டங்களுடன் செயல்பட்டு முன்னேறுவீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
கடகம்
இன்று மன நிம்மதி குறையும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். மனைவி, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் முதலீடுகளைக் குறைப்பது நல்லது.
சிம்மம்
இன்று சந்திர பகவான் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால், புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். நல்ல தன வரவு உண்டு. ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி
இன்று உங்கள் செயல்களில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
துலாம்
புதிய திட்டங்களால் வியாபாரத்தில் நல்ல லாபம் அதிகரிக்கும். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உங்களின் லட்சியம் மற்றும் நிதித் தேவைகளை அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு. நிதி ஆதாயம் பெறுவதற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். விளையாட்டு வீரர்கள், சீருடைப் பணியாளர்களுக்குச் சிறப்பான நாள்.
தனுசு
இன்று தீர்த்த யாத்திரைகள், கோவில்கள் எனப் பக்தி மிக்க நாளாக இருக்கும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும். புகழ் ஓங்கும். அரசு ஆதரவு உண்டு.
மகரம்
இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டும். எண்ணிய காரியங்கள் நேர்மாறாக நடக்க வாய்ப்புள்ளது. வழக்குகளை ஒத்திவைப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
கும்பம்
இன்று பல வழிகளிலும் பணம் வரும். புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். அரசாங்கத்தால் லாபம் உண்டாகும். பேச்சால் காரியத்தைச் சாதித்துக்கொள்வீர்கள். கல்வியில் சாதனை புரிவீர்கள்.
மீனம்
இன்று நிதி நிலைமை அதிகரிக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரிந்த கணவன் மனைவி இணைந்து மகிழ்வர். எல்லா வகையிலும் மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும்.