மாலையில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி!
கடந்த இரு நாட்களாக வேலூரில் கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், இன்று மாலை திடீரென பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும், இன்று காலை முதல் கடுமையான வெயிலின் தாக்கம் காணப்பட்டது. மக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டனர். இந்த நிலையில், மாலை நேரத்தில் வானம் கருமேகங்களால் சூழ்ந்து, திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
திருவள்ளூர், பேரம்பாக்கம், கடம்பத்தூர், பூண்டி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், தாமரைப்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், திருமழிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பள்ளி, கல்லூரி மற்றும் வேலை முடித்து வீடு திரும்பியவர்கள் இந்த திடீர் மழையில் நனைந்தவாறு சென்றனர். இந்த மழையின் காரணமாகப் பல நாட்களாக வாட்டி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.