பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வனத்துறை புதிய அறிவிப்பு; சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!
குற்றாலம் அருவிகளில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குளிக்க வருகின்றனர். குறிப்பாக, பழைய குற்றால அருவிக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம். கடந்த சில நாட்களாக, அருவிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத்துறைக்குத் தகவல்கள் வந்தன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கரடி ஒன்று அருவிக்கு அருகே வந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மனித-விலங்கு மோதலைத் தவிர்க்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த அதிரடி முடிவை வனத்துறை எடுத்துள்ளது. மாலை 5 மணிக்கு மேல் வனப்பகுதியில் விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.