மர்ம நபர்களின் தாக்குதலில் 5 பேர் படுகாயம்; பெரும் பரபரப்பு!
மணிப்பூரில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் மேலும் ஐந்து வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இம்பால் பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென மர்ம நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர்கள் சிலர் கீழே விழுந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
மேலும், காயமடைந்த ஐந்து பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து ராணுவம் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.