பழங்குடி மக்களின் குறைகளைக் கேட்க அடர் வனத்திற்குள் சென்ற பிரியங்கா காந்தி! Priyanka Gandhi treks to dense forest to understand tribal issues

பழங்குடி மக்களின் குறைகளைக் கேட்க அடர் வனத்திற்குள் சென்ற பிரியங்கா காந்தி! Priyanka Gandhi treks to dense forest to understand tribal issues

பாறைகளில் ஏறி, தொங்கு பாலங்களைக் கடந்து சோள நாயக்கர் சமூக மக்களுடன் உரையாடல்!

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நிலம்பூரில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் வசிக்கும் சோள நாயக்கர் பழங்குடி இன மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்துகொள்ள, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, ஆபத்தான மலைப் பாதைகளில் பயணம் செய்தார்.

பிரியங்கா காந்தி, வனத்துறை ஓய்வு விடுதியிலிருந்து போலீஸ் வாகனத்தில் காட்டுக்குள் புறப்பட்டார். வழியில், ரேஷன் பொருட்கள் வாங்க நின்ற ஒரு பழங்குடி பெண்ணைச் சந்தித்து அவரிடம் பேசிவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

பின்னர், அடர் வனப் பகுதிக்குள் சுமார் 2 கிலோமீட்டருக்கு மேல் செங்குத்தான பாறைகளில் இறங்கியும், தொங்கு பாலங்களைக் கடந்தும் நடந்து சென்றார். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரும், பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவருமான வினோத் என்பவருடன் பயணித்த பிரியங்கா, வனப்பகுதி மற்றும் பழங்குடி மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

சோள நாயக்கர் இன மக்களின் பிரதிநிதிகள், தங்களது சமூகத்தின் துயரங்கள், வீடு மற்றும் பாலங்கள் தொடர்பான கோரிக்கைகளை பிரியங்கா காந்தியிடம் தெரிவித்தனர். பழங்குடி மக்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறிந்த பிரியங்கா காந்தியின் இந்தச் செயல், அப்பகுதியில் உள்ளவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks