அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திணறுகிறார்: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி காட்டமான பேட்டி! Edappadi Palaniswami is struggling: Krishnasamy of Puthiya Tamizhagam delivers a fiery speech

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திணறுகிறார்: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி காட்டமான பேட்டி! Edappadi Palaniswami is struggling: Krishnasamy of Puthiya Tamizhagam delivers a fiery speech

மறைந்த தலைவர்களைப் பலியாக்கக் கூடாது - சமூக முரண்பாடுகளை உருவாக்க வேண்டாம் என வலியுறுத்தல்!

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரைச் சந்திக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறுகிறார். அரசியல் ரீதியான பிரச்சினைகளை அரசியல் ரீதியாக மட்டுமே அணுக வேண்டும். மறைந்த தலைவர்களைப் பலியாக்கிச் சமூகத்தில் முரண்பாடுகளை உருவாக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

மதுரை விமான நிலையப் பெயர் சர்ச்சை

மதுரை விமான நிலையத்துக்குப் பெயர் சூட்டுவது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மறைந்த தலைவர்கள் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சுந்தரலிங்கனார் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அரசு கட்டிடங்களுக்கும், விமான நிலையங்களுக்கும், ரயில் நிலையங்களுக்கும் தலைவர்கள் பெயர் வைப்பது எடுபடாது. பொறுப்புள்ள முன்னாள் முதல்வர், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் நிலையில் இதுபோன்ற சர்ச்சைக்கான விஷயங்களை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாதிரியான அரசியல் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும். எனவே, மறைந்த தலைவர்களின் பெயர்களை வைத்து அவர்களைப் பலியாக்கக் கூடாது.

2026 சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு

2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து எங்கள் நிலைப்பாட்டை ஜனவரி 7-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதுதான் எங்கள் கட்சியின் பிரதான நோக்கம். நாங்கள் வெற்றிபெற்று சட்டசபைக்குச் செல்ல வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பவர்களுக்கே எங்கள் ஆதரவு. நாங்கள் தற்போது நடுநிலை வகிக்கிறோம்."

த.வெ.க. குறித்து

த.வெ.க. ஒரு புதிய இயக்கம். அவர்கள் செல்வாக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றனர். த.வெ.க.வின் செயல்பாடுகளைக் கணித்த பிறகே கூட்டணி குறித்து முடிவெடுப்போம்."

தற்போதைய அரசு குறித்து

ஆளும்கட்சியை எதிர்த்துப் பேச எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. 505 வாக்குறுதிகள் கொடுத்து எது நிறைவேற்றப்பட்டது, எது நிறைவேற்றப்படவில்லை என்பது உள்ளது. நான்கரை ஆண்டுகள் முடிந்தும் அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என யாராலும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியவில்லை. நான்கு மாதங்களில் மட்டும் எப்படி முடியும்? அரசு அதிகாரிகளை கனிம வளக் கொள்ளைக்குக் கையெழுத்திட வைத்து, கடைசி நேரத்தில் கசக்கிப் பிழிவது சரியல்ல. இதனால் மக்கள் மாறுவார்கள் என்று கூற முடியாது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks