மணிப்பூருக்கு பிரதமர் மோடி செப்டம்பர் 13-ல் செல்ல வாய்ப்புள்ளதாகா மிசோரம் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மிசோரம் பயணம்:
பிரதமர் மோடி, மணிப்பூருக்குச் செல்வதற்கு முன்பு, மிசோரம் மாநிலத்திற்குச் சென்று, பைராபி-சாய்ராங் ரயில் பாதையைத் திறந்து வைக்க உள்ளார். இந்த ரயில் பாதை, வடகிழக்கு மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் கிழக்கு செயல்பாட்டுக் கொள்கையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் மிசோரம் வருகைக்காக, பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்டவை குறித்து உயர்மட்டக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மணிப்பூர் வருகை:
மிசோரம் பயணத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்வார் என்று மிசோரம் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மணிப்பூரில் உள்ள அதிகாரிகள் இதுவரை அவரது வருகையை உறுதிப்படுத்தவில்லை.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் இன வன்முறை வெடித்த பிறகு, பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்வது இதுவே முதல் முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வருகைக்காகச் சிறப்புப் பாதுகாப்பு குழுவின் ஆலோசனையின் பேரில், இரண்டு அடுக்குக் காட்சி கட்டர்கள், சிசிடிவி கேமராக்கள், ட்ரோன் கண்காணிப்பு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.