தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து காணப்படுவதால் முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் காரணமாகச் சென்னை, கோவை, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காய்ச்சல் அறிகுறிகள்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பகல் நேரங்களில் அதிக வெப்பமும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பதிவாகி வருகிறது. இந்தப் பருவநிலை மாற்றத்தால், பலருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் தொற்றுகிறது.
சுகாதாரத்துறை அறிவுறுத்தல்:
முதியவர்கள், குழந்தைகள், குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சுயமருந்து எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
இந்த வைரஸ் காய்ச்சல் விரைவில் பரவுவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனச் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
in
தமிழகம்