ஒவ்வொரு நுணுக்கத்தையும் புரிந்து கொண்டு தமிழகத்திற்குப் பல திட்டங்களைச் செயல்படுத்துவதாக மத்திய அமைச்சர் பெருமிதம்!
தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி பலவற்றைச் செய்து வருகிறார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காகத் தொலைநோக்குடன் சிந்தித்து அவர் செயல்பட்டு வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் எனப் பிரதமர் மோடி பல திட்டங்களைச் செயல்படுத்துகிறார். ஒவ்வொரு நுணுக்கத்தையும் அவர் புரிந்துகொண்டு தமிழகத்திற்கு நல்லது செய்கிறார் என்றார்.
மேலும், நாடு வளர்ச்சி அடையப் பிரதமர் மோடி தொலைநோக்குடன் சிந்தித்துச் செயலாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.