வரி குறைப்பின் மூலம் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும் என மத்திய நிதி அமைச்சர் நம்பிக்கை!
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மூலம் மக்கள் கையில் ₹2 லட்சம் கோடி கூடுதல் பணம் இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனால், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து, பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு குறித்துப் பேசிய அவர், "வரி குறைப்பால் மக்கள் கையில் ₹2 லட்சம் கோடி இருக்கும். இந்தத் தொகை மூலம் மக்கள் நிறையப் பொருட்களை வாங்குவார்கள். இதனால், நாட்டின் உற்பத்தி அதிகரிக்கும். வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏற்றுமதியும் உயர்ந்து, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்" எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த முடிவு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் எனப் பொருளாதார வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.