டெல்லியில் போராட்டம் நடத்தி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம் என விசிக தலைவர் அறிவிப்பு!
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில், இந்திய அரசு நீதியின் பக்கமும், பாலஸ்தீனத்தின் பக்கமும் நிற்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனத்தில் நடக்கும் படுகொலைகள் குறித்து இந்தியர்கள் யாரும் வாய் திறக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
சென்னையில், காஸா படுகொலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய திருமாவளவன், இந்திய அரசு நீதியின் பக்கம், அதாவது பாலஸ்தீனத்தின் பக்கம் நிற்க வேண்டும். பாலஸ்தீனத்தில் நடப்பதைப் பற்றி யாரும் வாய் திறக்கவில்லை எனப் பேசியுள்ளார்.
மேலும், டெல்லியில் போராட்டம் நடத்தி, அங்குள்ளவர்களை பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வைப்போம். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் குரல் கொடுப்போம் என அறிவித்தார்.