அதிமுக ஒருங்கிணைப்பு குறித்த கெடு நிறைவடைவது குறித்த கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பதில்!
அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சி தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளும் ஒன்றிணைவது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஒருங்கிணைப்புக்கான கெடு நிறைவடைவது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், அதிமுகவை ஒன்றிணைப்பதற்காகச் செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார்'' என்று கூறினார். இந்தப் பேச்சு அ.தி.மு.க. தொண்டர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
in
தமிழகம்