செப். 30-க்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் அவினாசி சாலை மேம்பாலம் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அவினாசி சாலை மேம்பாலத்தின் அனைத்துப் பணிகளும் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்று உறுதி அளித்துள்ளார்.
இந்த மேம்பாலத்தின் பணிகள் நிறைவடைந்து திறக்கப்படுவதால், கோயம்புத்தூரில் பல ஆண்டுகளாக இருந்து வந்த போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்பாலம் கோவை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.