நூறடிக்கும் முன் பசை ஒட்டிய சக மாணவர்கள்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில், தனது ஆண் நண்பரைச் சந்திக்கச் சென்ற மருத்துவ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அதே துறையைச் சேர்ந்த ஜூனியர் மருத்துவர் உஜ்வல் சோரன் என்பவருடன், ஒரு வருடமாக அந்த மாணவி பழகி வந்துள்ளார்.
இந்த உறவில் மாணவி கர்ப்பமானதாகவும், பின்னர் கருக்கலைப்பு செய்ததாகவும், அதன்பின் இருவரும் ரகசியமாக ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் மாணவியின் தாய் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். எனினும், நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொள்ளுமாறு மாணவி வற்புறுத்தியபோது, உஜ்வல் அவரைத் தவிர்த்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த அன்று உஜ்வல், மாணவியைத் தன்னைச் சந்திக்க மால்டாவுக்கு அழைத்துள்ளார். மகள் தீவிரமான நிலையில் இருப்பதாக உஜ்வல் எனக்குத் தெரிவிக்கவில்லை. மருத்துவமனைக்குச் சென்றபோது, அவள் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்தாள். அன்று இரவே அவள் உயிரிழந்துவிட்டாள் என்று மாணவியின் தாய் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து, மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் உஜ்வல் சோரனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவி போதைப்பொருள் overdose காரணமாக உயிரிழந்திருக்கலாமெனத் தெரிகிறது. எனினும், விரிவான அறிக்கைக்காகக் காத்திருப்பதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.