ஏன் இவ்வளவு செய்கின்றீர்கள் என முதல்வரிடம் கேட்டேன் - இசைஞானி இளையராஜா!
தனது பாராட்டு விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நடந்த உரையாடல் குறித்துப் பேசிய இசைஞானி இளையராஜா, உலக சாதனை படைத்த ஒரு தமிழனைப் பாராட்டுவது தமிழ்நாடு அரசின் கடமை என முதல்வர் கருதியதாகத் தெரிவித்து நெகிழ்ச்சியடைந்தார்.
இசைஞானி இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்பட்ட நிலையில், மேடையில் பேசிய அவர், எனக்கு ஏன் இவ்வளவு செய்கின்றீர்கள் என மேடையிலேயே முதல்வரை நான் கேட்டேன். நான் இதுபோன்ற பாராட்டுகளை எதிர்பார்க்கும் நபர் அல்ல. இருந்தும் என் மீது இவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள். அந்த அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன் என யோசித்தேன்'' என்று கூறினார்.
அதற்கு முதலமைச்சர் அளித்த பதிலைக் குறிப்பிட்ட இளையராஜா, சிம்பொனியின் சிகரத்தைத் நான் தொட்டதை மிகவும் முக்கியமாகவும், உலக சாதனை படைத்த ஒரு தமிழனைப் பாராட்டுவது தமிழ்நாடு அரசின் கடமை எனவும் முதல்வர் கருதியிருக்கிறார் என்று தெரிவித்தார்.
முதலமைச்சரின் இந்தச் செயல் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மரியாதையையும் தந்திருப்பதாக இளையராஜா குறிப்பிட்டார்.