கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!
தென்காசி நகரின் மையப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாறுகாலில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி தபால் நிலையம் அருகே உள்ள கழிவுநீர் வாறுகாலில், ஒரு சடலம் மிதப்பதாகப் பொதுமக்கள்,C காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர் யார் என அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால், அவர் யார் என்பது குறித்து எவருக்கும் தெரியவில்லை. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
in
தமிழகம்