சேற்றில் சிக்கியதால் உயிர் தப்பிய இளைஞர்; தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் விரைந்து நடவடிக்கை!
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் மனக்கஷ்டத்தில் இருந்ததால், இன்று திரு.வி.க. பாலத்திலிருந்து அடையாற்றில் குதித்துள்ளார். ஆற்றில் நீர் குறைவாக இருந்ததாலும், சேற்றில் சிக்கியதாலும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், மயிலாப்பூர் தீயணைப்புத் துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், படகின் உதவியுடன் பிரகாஷை பத்திரமாக மீட்டனர். பின்னர், அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
in
தமிழகம்