குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
குளச்சலில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர், தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேங்காப்பட்டணம் அருகே மாதாபுரத்தைச் சேர்ந்த 46 வயதான ஜெயின் மெலார்டு, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளியின் நடவடிக்கையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின், ஜெயின் மெலார்டை குண்டர் சட்டத்தில் அடைக்கப் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, குண்டர் சட்டத்தின் கீழ் அவரைச் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஜெயின் மெலார்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.