பாரிமுனையில் மதுபோதையில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு ரகளையில் ஈடுபட்ட இரண்டு சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தப்பி ஓடிய நிலையில், பொதுமக்கள் உதவியுடன் மீண்டும் பிடிபட்டார்.
பாரிமுனை, பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜின்னா (38). இவரும் இவரது சகோதரர் அபினேஷ் என்பவரும் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் வீட்டின் அருகே சண்டையிட்டுள்ளனர். இருவரையும் சமாதானப்படுத்த உறவினர்கள் முயன்றும் பலனில்லை.
தகவலறிந்து வந்த எஸ்பிளனேடு போலீசார், அவர்கள் இருவரையும் தடுத்தும், அவர்கள் போலீசாருக்கு முன்பாகவும் சண்டையிட்டதால், இருவரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
பின்னர், மருத்துவப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, போலீஸ் பிடியில் இருந்து ஜின்னா தப்பி ஓடினார். உடனடியாக அருகிலிருந்த பொதுமக்களின் உதவியுடன் அவரைப் போலீசார் மீண்டும் மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
in
தமிழகம்