தமிழகம் முழுவதும் 13 வழக்குகள் பதிவு; 30 பேர் கைது - முக்கிய புள்ளி சாமிநாதன் கஸ்டடி நிறைவு!
இரிடியம் மோசடி வழக்கில் ஏற்கனவே சேலம் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜோசப் என்பவர், தற்போது மதுரை சிபிசிஐடி போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு டிரஸ்ட் நடத்திப் பலரிடம் லட்சக்கணக்கில் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் அவர் மீண்டும் சிக்கியுள்ளார்.
இரிடியம் மோசடி தொடர்பாக, தமிழகம் முழுவதும் மொத்தம் 13 வழக்குகளை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்து, இதுவரை 30 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்குகளின் முக்கிய நபராகக் கருதப்படும் சாமிநாதன் என்பவரை மூன்று நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.
அவரது காவல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் சாமிநாதனை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.