பொதுமக்களை அச்சுறுத்தும் காட்டு யானை: கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க உத்தரவு! Kumki elephants to capture rogue wild elephant in Gudalur

பொதுமக்களை அச்சுறுத்தும் காட்டு யானை: கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க உத்தரவு! Kumki elephants to capture rogue wild elephant in Gudalur

கூடலூர் ஓவேலி பகுதியில் ஒரு மாதத்தில் இரண்டு பேர் பலி... வனத்துறை அதிரடி நடவடிக்கை!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிப் பொதுமக்களைத் தாக்கி அச்சுறுத்தி வந்த காட்டு யானையைப் பிடிக்க, தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் அருகே ஓவேலிப் பகுதியில் அடிக்கடி வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானை, தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளைச் சேதப்படுத்துவதுடன், விளைநிலங்களையும் நாசம் செய்து வந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், இரவு நேரங்களில் வீடுகளை இடிப்பதும், பயிர்களைச் சேதப்படுத்துவதும் அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் யானையைப் பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் தொடர்ச்சியான கோரிக்கையையும், யானையின் அச்சுறுத்தலையும் கருத்தில்கொண்டு, ராகேஷ் குமார் டோக்ரா, யானையைப் பிடிக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில், கும்கி யானைகளான சங்கர், விஜய், வசீம் ஆகியவை ஓவேலி பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.


வன கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ் மற்றும் சிறப்பு வன குழுவினர், கும்கி யானைகளின் உதவியுடன், காட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து அதனைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை, பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks