திருச்சுழி அருகே ஆர்ப்பாட்டம்: அடிப்படை வசதிகள் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்! CPI holds protest in Tiruchuli for basic amenities

திருச்சுழி அருகே ஆர்ப்பாட்டம்: அடிப்படை வசதிகள் கோரி  இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!  CPI holds protest in Tiruchuli for basic amenities

வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாததால் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, குடிநீர் மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள், உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனு அளிக்கச் சென்றபோது வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாததால், அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இறை சின்னம்பட்டி கிராமத்தில் குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், ம.ரெட்டியபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உழவர் சந்தை இல்லாததால் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை 25 கி.மீ. தொலைவில் உள்ள அருப்புக்கோட்டை சந்தைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகளின் நேரமும், பணமும் வீணாகி வருகிறது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில், திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டி ஒத்தக்கடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கச் சென்றபோது, வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் புகழேந்தியிடம் கோரிக்கை மனுவை அளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.


 

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks