உல்லாசத்திற்கு அழைத்து... நிர்வாணமாய் ரசித்த கணவன்: மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்து வினோத ரகசியம்; தம்பதியைச் சிக்க வைத்த இன்ஸ்டாகிராம்! Instagram Luring Scam: Kerala Couple Arrested for Torture

உல்லாசத்திற்கு அழைத்து... நிர்வாணமாய் ரசித்த கணவன்: மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்து வினோத ரகசியம்; தம்பதியைச் சிக்க வைத்த இன்ஸ்டாகிராம்!  Instagram Luring Scam: Kerala Couple Arrested for Torture

போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்; ஓணம் பண்டிகையிலும் மற்றொரு வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்!


வாலிபர்களை உல்லாசத்திற்கு அழைத்து, அவர்களது அந்தரங்கங்களை வீடியோ எடுத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்துச் சித்ரவதை செய்த தம்பதியைக் கேரளா போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பத்தனம்திட்டா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டம் சரல்குன்னு பகுதியைச் சேர்ந்த ஜெயேஷ் (29) மற்றும் அவரது மனைவி ரஷ்மி (23), கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர்களைத் தேடி வந்துள்ளனர். ஆசை வார்த்தை கூறி அவர்களை வீட்டுக்கு அழைத்துள்ளார் ரஷ்மி. இந்த வலைக்குள் சிக்கிய ஆலப்புழாவைச் சேர்ந்த ஒரு வாலிபரை, கடந்த 1-ஆம் தேதி ரஷ்மி வீட்டுக்கு வரவழைத்தார். அந்த வாலிபர் வீட்டுக்குள் வந்ததும், ரஷ்மி அவரிடம் நெருங்கிச் சென்றபோது, மறைந்திருந்த ஜெயேஷ் அதனைத் தனது செல்போனில் ரகசியமாகப் படம் எடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் கணவன் ஜெயேஷ், மனைவியுடன் சேர்ந்து அந்த வாலிபரை மிரட்டி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.6 ஆயிரத்தைக் கண் இமைக்கும் நேரத்தில் பறித்துள்ளனர். அதோடு, அவரது கைகளைக் கட்டித் தொங்கவிட்டு, மர்ம உறுப்பில் 26 'ஸ்டேப்ளர் பின்'களை அடித்துச் சித்ரவதை செய்துள்ளனர். இதில் வலி தாங்க முடியாமல் வாலிபர் அலறியுள்ளார். பின்னர் அவரது வாயைத் துணியால் கட்டி, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் போட்டுவிட்டுச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஆரன்மூளா போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் குறித்துக் கிடைத்த தகவலின் பேரில் ஜெயேஷ் மற்றும் அவரது மனைவி ரஷ்மியை போலீசார் கைதுசெய்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசடிக் கும்பல் ஓணம் தினத்தன்று கூட மற்றொரு வாலிபரை இதேபோல ஏமாற்றி சித்திரவதை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks