இந்தியாவிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க.தான்! - முன்னாள் முதல்வர் பாய்ச்சல்!
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை எனவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க.தான் எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க. ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அரசு மருத்துவமனைகளில் மக்கள் உரிய சிகிச்சை பெறுவதற்குக்கூடப் போராட வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவிலேயே ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது தி.மு.க. ஆட்சிதான்" எனச் சாடினார்.