அதிர்ச்சி! - மனைவியை அடித்து அரை நிர்வாண ஊர்வலம்: ஒரிசாவில் கொடூர சம்பவம்! Husband Beats Wife, Parades Her Half-Naked in Odisha

அதிர்ச்சி! - மனைவியை அடித்து அரை நிர்வாண ஊர்வலம்: ஒரிசாவில் கொடூர சம்பவம்! Husband Beats Wife, Parades Her Half-Naked in Odisha

மனைவிக்கு தகாத உறவு என சந்தேகம்; கணவர் கொடூரம்!

ஒரிசா, பூரி: மனைவிக்குத் தகாத உறவு இருப்பதாகச் சந்தேகித்த கணவர் ஒருவர், மனைவியையும் அவரது ஆண் நண்பரையும் அரை நிர்வாணமாகச் சரமாரியாகத் தாக்கி, ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரச் சம்பவம் ஒரிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மனைவிக்கு சக ஊழியருடன் தகாத உறவு இருப்பதாகக் கணவர் சந்தேகித்துள்ளார். இதையடுத்து, தனது மனைவியைப் பார்க்க வந்த அந்த ஆண் ஆசிரியரைத் தாக்கிய கணவர், மனைவியையும் சரமாரியாக அடித்துள்ளார்.

தாக்கியதோடு நிற்காமல், இருவருக்கும் மாலை மாற்றி, அந்த ஆண் ஆசிரியரை அரை நிர்வாணமாக தனது மனைவியுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks