கடன் சுமையால் மனமுடைந்து விபரீத முடிவு; போலீசார் விசாரணை!
எடப்பாடி அருகே, கடன் சுமை காரணமாக மனமுடைந்த ஓட்டல் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி அருகே உள்ள சின்னமணலியைச் சேர்ந்த பாலாஜி (32) என்பவர், சொந்தமாக ஓட்டல் நடத்தி வந்தார். கடன் சுமை அதிகரித்ததால், அவர் தனது ஓட்டலை விற்றுவிட்டு, வேறொரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இருப்பினும், கடன் சுமை குறையாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்த மன உளைச்சல் காரணமாக நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்துத் தகவல் அறிந்த எடப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.