GST 2.0 implementation: கோவையில் நேரடியாகக் களமிறங்கி ஆய்வு செய்த வானதி சீனிவாசன்! Coimbatore Traders and Public Welcome GST Cuts Vanathi Srinivasan Reviews GST Price Reduction

GST 2.0 implementation:  கோவையில் நேரடியாகக் களமிறங்கி ஆய்வு செய்த வானதி சீனிவாசன்! Coimbatore Traders and Public Welcome GST Cuts Vanathi Srinivasan Reviews GST Price Reduction

மக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி! - பொருட்கள் விலை குறைந்ததால் வாங்கும் திறன் அதிகரிப்பு; பிரதமர் மோடிக்கு நன்றி கூற வேண்டும் என வலியுறுத்தல்!

கோவை, செப். 22: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி 2.0 வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன் தாக்கம் குறித்து நேரடியாக அறிந்துகொள்ள, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் வரி குறைப்பால் அடைந்த மகிழ்ச்சியை அவரிடம் பகிர்ந்து கொண்டனர்.

வரிக்குறைப்பின் தாக்கம்:

இந்தப் புதிய வரி முறைப்படி, இனி 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரி விகிதங்கள் மட்டுமே அமலில் இருக்கும். இதற்கு முன்பு 12 சதவீத வரி அடுக்கில் இருந்த 99 சதவீத பொருட்கள், 5 சதவீத வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசியப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள் எனப் பலவற்றின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாபாரிகளின் கருத்து:

வானதி சீனிவாசன் வியாபாரிகளுடன் பேசியபோது, “அரசு அறிவித்த ஜி.எஸ்.டி. வரி குறைப்புப்படி விற்பனை செய்து வருகிறோம். இனிப்பு மற்றும் கார வகைகளின் விலை குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த திருப்தியுடன் வாங்கிக்கொள்கின்றனர். நாங்களும் மனநிறைவுடன் இருக்கிறோம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அப்போது பேசிய வானதி சீனிவாசன், “இந்த வரி குறைப்பை அறிவித்த பிரதமர் மோடி அவர்களுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்” என வலியுறுத்தினார்.

மக்களின் மனநிலை:

பொதுமக்களும் இந்த வரி குறைப்பால் பயனடைந்துள்ளதாகத் தெரிவித்தனர். ஒரு வாடிக்கையாளர் பேசும்போது, “எனது இருசக்கர வாகனத்தை மாற்றுவதற்காக ஷோரூம் சென்றபோது, ஜி.எஸ்.டி. வரி குறைந்த பின்பு வருமாறு கூறினார்கள். இன்று இந்தக் கடையில் வாங்கிய பொருட்களின் விலையும் நேற்று இருந்ததை விடக் குறைந்துள்ளதால், மேலும் சில பொருட்களைக் கூடுதலாக வாங்கினேன்” என்றார். இருசக்கர வாகனம் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை குறைந்ததால் பொதுமக்கள் பயனடைவதாக வானதி சீனிவாசன் உறுதிப்படுத்தினார். மேலும், “வரி குறைப்பால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், பொதுமக்கள் அதிக பொருட்களை வாங்கிப் பயனடைகிறார்கள்” என்றும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks