Coimbatore Blast Case: மத அரசியலில் கட்சிகள் ஈடுபடக்கூடாது - இந்து முன்னணி பொதுச் செயலாளர் கிஷோர் குமார் ஆவேசம்! Kishor Kumar Slams Political Parties on Religious Politics

Coimbatore Blast Case: மத அரசியலில் கட்சிகள் ஈடுபடக்கூடாது - இந்து முன்னணி பொதுச் செயலாளர் கிஷோர் குமார் ஆவேசம்!  Kishor Kumar Slams Political Parties on Religious Politics

குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வேண்டும்; வெளி மாநில குற்றவாளிகளுக்கு தமிழகம் புகலிடமாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு!


கோவை செல்வபுரம் அருகே நடைபெற்ற இந்து முன்னணி முன்னாள் செய்தி தொடர்பாளர் சசிகுமாரின் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலியில் கலந்துகொண்ட இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் நடைபெறும் அரசியல் குறித்தும், சட்டம் ஒழுங்கு குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மத அரசியல் குறித்த குற்றச்சாட்டு:

இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல. ஆனால், தமிழகத்தில் மத அரசியல் தான் நடக்கிறது. இஸ்லாமியர் ஓட்டுகளுக்காகத் திராவிடக் கட்சிகள் கூட்டணி போடுவதை மாற்ற வேண்டும்" என்று கிஷோர் குமார் கடுமையாக விமர்சித்தார்.

சசிகுமார் கொலை வழக்கு:

சசிகுமார் கொலை வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஆனால் இந்த வழக்கை நடத்தக் கூடாது எனப் பல முயற்சிகள் நடப்பதாகவும் அவர் கூறினார். வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு ஒரு முறைக்குப் பல லட்சம் செலவு செய்யப்படுகிறது. இதற்குப் பின்னால் பெரிய சதி இருக்கிறது" என்று அவர் குற்றம் சாட்டினார்.

வெளி மாநில குற்றவாளிகளுக்குத் தமிழகம் அடைக்கலம்:

தமிழகம், வெளி மாநில குற்றவாளிகளுக்கு ஒரு புகலிடமாக மாறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பெங்களூரில் குண்டுவெடிப்பு நடந்தால், அதன் குற்றவாளிகளைத் தேடி கோயம்புத்தூருக்கு வருகிறார்கள். அதேபோல, கேரள போலீசாரும் இங்கு வருகிறார்கள். இது குற்றவாளிகளுக்குத் தமிழகம் அடைக்கலம் தருவதாகவே காட்டுகிறது" என்றார்.

குண்டுவெடிப்பு வழக்குகள்:

கோவையில் 1998-ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் பலியானபோதும், குற்றவாளிகள் பலர் விடுதலை செய்யப்பட்டதாகவும், பலர் கைது செய்யப்படவே இல்லை என்றும் அவர் தெரிவித்தார். "அண்மையில் கைது செய்யப்பட்ட அபுபக்கர் ராஜாவும், டைலர் ராஜாவும் 30 ஆண்டுகளாக எங்கு இருந்தார்கள்? அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் யார்? அவர்களுக்குக் கடுமையான தண்டனை வாங்கி கொடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் குற்றங்கள் குறையும்" என்றார்.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலை, அதிகாரிகள் 'சிலிண்டர் வெடிகுண்டு' எனத் தவறாகக் கூறியதாகவும், ஆனால் தேசிய புலனாய்வு முகமை அதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks