நேபாள அரசின் ஊழலுக்கு எதிராக GenZ இயக்கம் கொதித்தெழுந்தது; இந்தியத் தலைநகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
நேபாள அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அந்நாட்டில் வெடித்துள்ள வன்முறையில், 'GenZ' இயக்கத்தினர் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தைச் சூறையாடி வருகின்றனர். இந்தச் சம்பவம் நேபாளத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் குறித்த புகார்கள் நீண்ட காலமாகவே நேபாள அரசிற்கு எதிராகக் குவிந்து வந்த நிலையில், 'GenZ' என்றழைக்கப்படும் இளைஞர் இயக்கம், தங்களின் எதிர்ப்பை வன்முறையாக மாற்றியுள்ளது. போராட்டக்காரர்கள் உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த அலுவலகப் பொருட்கள் மற்றும் ஆவணங்களைச் சேதப்படுத்தி வருகின்றனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களின் எதிரொலியாக, இந்தியாவில் உள்ள நேபாளத் தூதரகத்திற்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் உள்ள நேபாள தூதரகத்திற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க இந்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.