புதிதாக மேம்படுத்தப்பட்ட நிலையத்தை பார்வையிட்டார்; சிஎம்சி மருத்துவமனையில் ஒத்திகை நிகழ்ச்சிக்கு தலைமை!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு, தரம் உயர்த்தப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் இயக்குனர் சீமா அகர்வால் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, நிலையத்திற்கு வருகை தந்த அவருக்கு, தீயணைப்பு உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
இந்த ஆய்வின்போது, தீயணைப்பு நிலையத்தின் வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். மேலும், நிலையத்தின் அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதையொட்டி, பூட்டுதாக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல சிஎம்சி மருத்துவமனையில், தீவிர மறுமொழிக் குழுவுடன் இணைந்து தீயணைப்பு, முதலுதவி செயல்விளக்கங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் அவரது தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், துணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட அலுவலர் ராபின் காஸ்ட்ரோ, உதவி நிலைய அலுவலர்கள் சக்திவேல், திருமுருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் உடனிருந்தனர்.